பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதை துரிதப்படுத்தல் டெங்கு ஒழிப்பு செயலணியின் ஊழியர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ளல் ஆகியவை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு இணைவாக குருவிட்ட பிரதேச செயலக காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் குருவிட்ட நகர மக்களை தெளிவுபடுத்தும்; வேலைத்திட்டமும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இடம்பெற்றது.