இலங்கைக்கு கோப்பி உற்பத்தி அதிகரிப்பதற்கு வாய்ப்பு

இலங்கைக்கு கோப்பி உற்பத்தி அதிகரிப்பதற்கு வாய்ப்பு

கோப்பி உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பினை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவில்  இலங்கை அரபிகா கோப்பி தொடர் பகுப்பாய்வு என்ற தலைப்பில் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கோப்பி உற்பத்திக்கு ஏற்ற வகையிலான சுவாத்தியத்தை இலங்கை கொண்டுள்ளதுடன், பூகோள ரீதியாக கோப்பி விநியோகத்திற்கு ஏற்ற நிலையில் இலங்கை அமைந்துள்ளது

அரபிக்கா வகையான கோப்பி மத்திய மற்றும் மேட்டு நில பிரதேசங்களில் சிறந்த பலாபலன்களை அளிக்கக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபரங்களுக்கு அமைய 80 சத வீதமான, சிறந்த ரக கோப்பி வகைகள் சிறிய உற்பத்தியாளர்கள் மற்றும் வீட்டு தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், உற்பத்தி குறித்து நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிக கவனத்தை மேற்கொள்ளும் நிலையில், உலக சந்தையில் இலங்கை கோப்பிக்கு சிறந்த வரவேற்பை பெற முடியும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.