
மக்களுக்கு தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை
மக்களுக்கு தரமான கடலுணவுகளை நியாயமான விலையில் கிடைப்பதை உறுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் சுமார் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், அண்மையில் இடம்பெற்ற வாழ்கை செலவை கட்டுப்படுத்துவது தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின் போது, இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு நிதி வழங்கப்படுமாயின், கடற்றொழிலாளர்களுக்கு அதிக கடலுணவு அறுவடை கிடைக்கும் காலப் பகுதியில், அவற்றை நியாயமான விலையில் கொள்வனவு செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதன்படி, அவற்றைக் கொள்வனவு செய்து, களஞ்சியப்படுத்துவன் ஊடாக, அறுவடை குறைந்த காலப்பகுதியில் அவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் பெற்றுக் கொடுக்க முடியும் என ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, 200 மில்லியன் ரூபா நிதியை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார்.