மக்கள் குடியிருப்பு மீது ஏவுகணைத் தாக்குதல் இரு குழந்தை உட்பட பலர் பலி

மக்கள் குடியிருப்பு மீது ஏவுகணைத் தாக்குதல் இரு குழந்தை உட்பட பலர் பலி

அஜர்பைஜானின் இரண்டாவது பெரிய நகரமான காஞ்சா மீது இன்று அதிகாலை ஆர்மீனிய படைகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என சர்வதேச செய்தி முகவர் செய்தி வெளியிட்டுள்ளது.

காஞ்சாவில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக அசெரி பிரதி வழக்குத்தொடுநர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும் தாம் அந்த தாக்குதலை மேற்கொள்ளவில்லை என ஆர்மீனியா இதற்கு மறுப்புத் தெரிவித்துவருகிறது.

இந்த தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ள ஏனையோரை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஜர்பைஜான் ஜனாதிபதியின் உதவியாளர் ஹிக்மெட் ஹஜியேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அஜர்பைஜான் சுரங்க நடவடிக்கைக்கான தேசிய நிறுவனத்தின் (அனாமா) கருத்துப்படி, கஞ்சா மீது வீசப்பட்ட ஏவுகணைகள் ஆரம்பத்தில் SCUD / எல்ப்ரஸ் செயல்பாட்டு தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என அடையாளப்படுத்தப்பட்டது.