கொழும்பு மாநகர சபையின் முதல்வருக்கு கொரோனாவா? வெளியாகியது பி.சி.ஆர் முடிவு

கொழும்பு மாநகர சபையின் முதல்வருக்கு கொரோனாவா? வெளியாகியது பி.சி.ஆர் முடிவு

கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்க கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை என கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.

இவரிற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்சோதனையின் முடிவின் படி அவரிற்கு தொற்று ஏற்படவில்லை எனவும் ரோசி சேனநாயக்க பாதிக்கப்பட்டுள்ளார் என வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனாநாயக்க உட்பட மாநகரசபையின் 140 உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.