மீறினால் சட்ட நடவடிக்கை - பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

மீறினால் சட்ட நடவடிக்கை - பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வவுனியா பொலிஸார் இன்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், கொவிட் - 19 தாக்கம் அதிகரித்து செல்வதால் தேவைக்கேற்ப நகருக்குள் பிரவேசிப்பதுடன் குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும்.

வங்கிகள், வியாபார நிலையங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பது சாலச்சிறந்ததாகும்.

20 நொடிகள் கைகளை கழுவியே உள் செல்லுங்கள். அத்தோடு சமூக இடைவெளியையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வர்த்தக நிலையங்களில் பணிபுரிபவர்கள் கையுறை மற்றும் முககவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வியாபார நிலையத்திற்கு முன்பாக கைகழுவுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் தனிநபர் இடைவெளியை பேணவேண்டும் என்பதையும் அறிவுறுத்துகின்றோம்.

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சுகாதார அறிவுறுத்தல்களை தங்களால் மீறப்படும் பட்சத்தில் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை நகர் பகுதிகளில் அதிகமான திருடர்கள் இருப்பதனால் பெண்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதையும் தேவைக்கு அதிகமாக பணத்தினை கொண்டு வருவதனையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.