அச்சுறுத்தும் கொரோனா - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

அச்சுறுத்தும் கொரோனா - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வயோதிபர்கள் விரைவில் உயிரிழப்பதற்கு அதிக சந்தர்ப்பம் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

கொரோனா நோயாளிகளுக்கு தற்போதுள்ள வைத்தியசாலையில் இடம் போதுமானதாக இருக்கிறது. தேவைப்பட்டால் அந்த இடத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வயோதிபர்கள் விரைவில் உயிரிழப்பதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது.

எனவே, வயோதிபர்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்ற தெரிவித்துள்ளார்.