நீதித் துறையின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய ஐந்து குழுக்கள் நியமனம் – அலி சப்ரி!

நீதித் துறையின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய ஐந்து குழுக்கள் நியமனம் – அலி சப்ரி!

நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதம் அடைவதைத் தடுக்கும் வகையிலும், நீதித் துறையின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கிலும் ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த குழுக்கள், நீதியமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த குழுக்களை நியமிப்பதற்கு, நீதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்ததன் பின்னரே, இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நீதித் துறையில் காணப்படும் சிக்கல்களை, மூன்று வருட காலத்திற்குள் தீர்ப்பதே, இதன் பிரதான நோக்கமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய. நீதித் துறையில் காணப்படும் சிக்கல்களை அடையாளங் கண்டு, தேவையான மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவும், தீர்வுகளை முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.