கட்டுநாயக்க ஆடைத்தொழிற்சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை!

கட்டுநாயக்க ஆடைத்தொழிற்சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வளாகத்தில் செயற்படும் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதுடன், வேண்டிய நடவடிக்கைகளும் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் வரையில் ஆயிரத்து 483 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.