கேகாலை மாவட்டத்தில் விதிக்கப்பட்டது பயணத்தடை உத்தரவு
கேகாலையில் 5 பகுதிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் பத்மகுமார விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இரியகொல்ல, எம்புலம்பே, பின்ஹென, யடயவத்த மற்றும் கிரிவல்லபிட்டிய போன்ற பகுதிகளுக்கே பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனையைச் சேர்ந்த ஒரு பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வைத்தியர் விக்ரமசிங்க கூறினார்.
இரியகொல்ல பகுதியில் வசிக்கும் குறித்த பெண் கலகெதிஹேனவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்கின்றார்.
கேகாலை மாவட்டத்தில் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதையடுத்து மொத்தம் 636 பேர் அந்தந்த குடியிருப்புகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த மாவட்டத்தில் தொடர்ந்தும் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வைத்தியர் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.