இலங்கை கடற்படை சேவையிலிருந்து விடைபெறும் இரண்டு கப்பல்கள் (படங்கள்)
இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படையில் சேவைக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த இரண்டு கப்பல்களை சேவையிலிருந்து நீக்குவதற்கான நிகழ்வொன்று சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு திருகோணமலை கடற்படையின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் இடம்பெற்றது.
'ஹீரோ' மற்றும் 'ஜகதா' ஆகியவை நான்கு தசாப்தங்களாக தீவைச் சுற்றியுள்ள கடல்களின் பாதுகாப்பிற்காக இரவு பகலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
யுத்தக் கப்பல் ஒன்று கடற்படையில் இணைத்துக்கொள்வதற்கும், அதை சேவையில் இருந்து விடுவிப்பதற்கும் நாட்டு ஜனாதிபதியின் கையெழுத்துடனான சிறப்பு ஒப்புதல் அவசியமென்பது குறிப்பிடத்தக்கது.













