உயர்தரப் பரீட்சையில் “ஸ்மார்ட்” கடிகாரத்தை பயன்படுத்தி மாணவன் செய்த காரியம்

உயர்தரப் பரீட்சையில் “ஸ்மார்ட்” கடிகாரத்தை பயன்படுத்தி மாணவன் செய்த காரியம்

ஸ்மாட் கைக்கடிகாரத்தை பயன்படுத்தி நேற்று இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின், உயிரியல் வினாத்தாளுக்கான பதிலை வழங்கிய மாணவன ஒருவர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கம்பஹா நகரில் உள்ள ஆண்கள் பாடசாலை மாணவர் ஒருவர் குறித்தே இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அந்த மாணவன பரீட்சைக்கு இடைநடுவே  ஸ்மாட் கடிகாரத்தை பார்வையிட்டு கொண்டிருந்ததை அவதானித்த பரீட்சை மண்டப கண்காணிப்பாளர், அது தொடர்பில் பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிக்கு அறியப்படுத்தியுள்ளார்

பின்னர் குறித்த மாணவரின் கைக்கடிகாரத்தை பொறுப்பேற்ற மண்டப பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்

உயிரியல் குறித்த தரவுகளை மின்இதழ் வடிவில் தமது  ஸ்மாட் கைக்கடிகாரத்தில் உள்ளடக்கி, குறித்த மாணவன் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த மாணவன் இன்றைய தினமும் பரீட்சைக்கு தோற்றியுள்ளதால், அவரை கைது செய்யாது வாக்கு மூலத்தை பெற்று அவரை விடுவித்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற பொருளியல் விஞ்ஞான வினாத்தாளை தமது கையடக்க தொலைபேசியில் பிரதிசெய்து அதனை வெளி நபர் ஒருவருக்கு அனுப்பிய பொறளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர் தொடர்பாக குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு முறையிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர், வினாப்பத்திரம் கிடைத்தவுடனேயே அதனை கையடக்க தொலைபேசியில் படம்பிடித்து வெளி நபர் ஒருவருக்கு அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.