மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 446 ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய, அவர்களில் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள brandix தொழிற்சாலை ஊழியர்கள் எனவும், ஏனைய 17 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்காயிரத்து 893 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, அவர்களில் மூவாயிரத்து 328 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆயிரத்து 552 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்