பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இருவருக்கும் கொரோனா: பரீட்சை ஆணையாளர் விடுத்துள்ள தகவல்

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இருவருக்கும் கொரோனா: பரீட்சை ஆணையாளர் விடுத்துள்ள தகவல்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த ஐவரும் பரீட்சை எழுதுவதற்கான மாற்று ஏற்பாடுகள் ஐ.டி.எச். வைத்தியசாலை வளாகத்தில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாளை சுகாதார பாதுகாப்புடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.