மட்டக்களப்பில் விபத்து - இருவர் பலி...!

மட்டக்களப்பில் விபத்து - இருவர் பலி...!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை - மணல்பிட்டி பகுதியில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில், கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 17 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே பலியாகினர்.

அவர்களின் சடலங்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவரும் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்