தொழில்சார் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை

தொழில்சார் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில், மீனவ, சமுத்திர மற்றும் கடற்படை பொறியியல் துறைகளில் தொழில்சார் மற்றும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

சமுத்திர பல்கலைக்கழகத்தின் பௌதீக மற்றும் மனித வள மேம்பாடு தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கலமெடியான பிரதேசத்தில் நிறுவி, அபிவிருத்தி செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் சமுத்திர பல்கலைக்கழகத்தின்; தொழில்நுட்ப பீடத்தை தற்போது இயங்கிவரும் மட்டக்குளிய பிரதேசத்தை மையமாகக் கொண்டு அபிவிருத்தி செய்யுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.

வரையறுக்கப்பட்ட இட வசதிகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி கற்கை நெறிகள் தொடர்பில் அவதானம் செலுத்திய பிரதமர், அந்த சிரமங்களை குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.