மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்....!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்....!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.