ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 52 பேர் கைது
மீள் அறிவித்தல் வரை மினுவங்கொடை, வெயாங்கொடை மற்றும் திவுலபிடிய ஆகிய பகுதிகளில் காவற்துறை ஊரடங்கு உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி கம்பஹா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பை பேணிய பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா ரைவஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த மூன்று பகுதிகளிலும் காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.