அறநெறிப் பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

அறநெறிப் பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையை அடுத்து, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய, நாட்டின் பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் அதே காலப்பகுதியில், பௌத்த அறநெறிப் பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.