ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தொடர்பாக விசேட அறிவிப்பு!
மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களில் ஊரடங்கு காலத்தில் பயணிப்பதற்கான அனுமதிப் பத்திரம் தேவைப்படுவோர் உரிய பொலிஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மினுவாங்கொடை பிரதேசத்தில் ஊரடங்கு அனுமதிப் பத்திரம் தேவைப்படுவோர், மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சீ.பீரிஸ் உடன் 071 859 16 17 எனும் இலக்கத்தில் தொடர்பை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திவுலபிட்டிய பிரதேசத்தில் ஊரடங்கு அனுமதிப் பத்திரம் தேவைப்படுவோர், திவுலபிட்டிய பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். கொட்டஹச்சி உடன் 071 859 16 28 எனும் இலக்கத்தில் தொடர்பை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.