தெற்கு அதிவேக பாதையில் செல்வோருக்கு முக்கிய தகவல்

தெற்கு அதிவேக பாதையில் செல்வோருக்கு முக்கிய தகவல்

தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை நோக்கி பயணிக்கும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக பாதையில் வெலிபென்ன பகுதியில் பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதனால் குறித்த பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே சாரதிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.