வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு காத்திருந்த க்ஷாக்!

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு காத்திருந்த க்ஷாக்!

 கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்முல்ல பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்று (5) அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை ஒரு மணியளவில் வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர், மின்சாரத்தை துண்டித்துவிட்டு, பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு காத்திருந்த க்ஷாக்! | Sleeping Woman S Gold Chain Cutபாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பில் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.