திடீரென மோதிய மயில் - பரிதாபமாக பலியான 18 வயதுடைய இளைஞன்

திடீரென மோதிய மயில் - பரிதாபமாக பலியான 18 வயதுடைய இளைஞன்

மோட்டார் சைக்கிள் ஒன்று மயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹெட்டிபொல – வஸ்கமுவ வீதியின் 42 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஹந்துன்கமுவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

 

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஹெட்டிபொல பக்கத்திலிருந்து வஸ்கமுவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென மயிலுடன் மோதியுள்ளது.

திடீரென மோதிய மயில் - பரிதாபமாக பலியான 18 வயதுடைய இளைஞன் | Young Man Loses His Life Because Of A Peacock

இதனால் வேகம் மற்றும் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரமொன்றில் மோதி தடம் புரண்டுள்ளது.

இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹந்துன்கமுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றன.