அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழித்தடம்! ஈரானின் பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழித்தடம்! ஈரானின் பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்கா மற்றொரு கடல் வழித்தடத்தை உருவாக்க முயற்சி செய்து வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்காவுடன் இறுதி உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்பு நடைபெறும் 60 நாள் பேச்சுவார்த்தைகளின் போது, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) 5-வது பிரிவின் கீழ் ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஈரானுடன் ஒருங்கிணைக்காமல் எந்தவொரு கப்பலும் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாது என்றே கூறப்படுகிறது.

 

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு

இவ்வாறானதொருபின்னணியில், அமெரிக்கர்கள் மற்றொரு கடல் வழித்தடத்தை உருவாக்க முயற்சி செய்து வருவதாக ஈரானிய அதிகாரிகளின் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமெரிக்கா உருவாக்கும் புதிய கடல் வழித்தடம்! ஈரானின் பரபரப்பு குற்றச்சாட்டு | Us To Create Another Sea Route Iran Accuses

இந்த 60 நாள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை நிரந்தர அடிப்படையில் இணைந்து ஒருங்கிணைப்பது குறித்து ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இருப்பினும், தற்போதைக்கு ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைத் தன் வசம் வைத்திருப்பதற்கான முழுப் பொறுப்பையும் இந்த ஒப்பந்தத்தின் 5-வது பிரிவு ஈரானுக்கே வழங்குகிறது என்று ஈரானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.