
மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்
2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை மறுதினம் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) அறிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான உதவித்தொகையை மொத்தம் 1,421,574 குடும்பங்கள் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 11,201,647,000.00 ரூபாய் ஒதுக்கபட்டுள்ள நிலையில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் அஸ்வெசும நிவாரண உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.