ஆபத்தான பொருளுடன் இலங்கை வந்த இந்திய இளைஞன்; விமான நிலையத்தில் கைது

ஆபத்தான பொருளுடன் இலங்கை வந்த இந்திய இளைஞன்; விமான நிலையத்தில் கைது

10 கிலோ கிராமுக்கும் அதிகளவான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (10) பயணிகள் வருகை முனையத்தின் ஊடக வெளியேற முற்பட்ட சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரை சுங்க பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

ஆபத்தான பொருளுடன் இலங்கை வந்த இந்திய இளைஞன்; விமான நிலையத்தில் கைது | Indian Arrives In Sri Lanka Smuggling Cannabisஇதன்போது நபரின் பயணப்பொதியினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ 750 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியா டெல்லியிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினுடாக சந்தேகநபர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

கைதான நபர் 24 வயதுடைய இந்திய பிரஜை என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.