
வரலாறு காணாத வகையில் அதிகரித்து கொண்டே செல்லும் தங்க விலை
இன்று இதுவரை, தங்க விலையில் மாற்றம் ஏற்படவில்லையென கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாத்திரம் தங்க விலை 7,000 ரூபாயால் அதிகரித்து, தற்பொழுது 300,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 300,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 277,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,688 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.