
புதிதாக நிறுவப்பட்ட பணியகம் ; 15 கடுமையான சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
புதிதாக நிறுவப்பட்ட மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், நிதிக் குற்றங்கள் மற்றும் சட்ட விதிகள் மீறப்பட்டமை தொடர்பான 15 கடுமையான சம்பவங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் பிற சட்ட அமுலாக்க அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் அண்மையில் நிறுவப்பட்டது.
விரைவான மற்றும் விசேட கவனம் தேவைப்படும் சிக்கலான மற்றும் உணர்திறன் வாய்ந்த வழக்குகளைக் கையாள்வது இந்த பணியகத்தின் நோக்கமாகும்.
தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமுள்ள பல வழக்கு கோப்புகள் மற்றும் முறைப்பாடுகள் புதிய பிரிவுக்கு மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.