நடுவீதியில் இளைஞனுக்கு அதிரடி வகுப்பெடுத்த பொலிஸ்! வைரலாகிய வீடியோ

நடுவீதியில் இளைஞனுக்கு அதிரடி வகுப்பெடுத்த பொலிஸ்! வைரலாகிய வீடியோ

போக்குவரத்து நடைமுறைகளை மீறி பயணித்த இளைஞரை அழைத்து நடுவீதியில் படிப்பித்த பொலிஸாரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கதிர்காமம் பகுதியில் உள்ள பிரதான வீதி ஒன்றில், சனநெரிசல் அதிகமாக இருந்துள்ளது.

அப்போது போக்குவரத்து பொலிசார் தமது கடமைகளை செய்துகொண்டிருந்தனர்.

நடுவீதியில் இளைஞனுக்கு அதிரடி வகுப்பெடுத்த பொலிஸ்! வைரலாகிய வீடியோ | Police Lesson Young Man In The Middle Street Viral

அந்தவகையில் ஒரு போக்குவரத்து பொலிசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்தி வாகனங்களை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்து பிரதான வீதிக்குள் நுழைந்தனர்.

இதனால் ஆத்தரமடைந்த போக்குவரத்து பொலிசார், அதில் ஒரு இளைஞனை அழைத்து நடுவீதியில் நிறுத்தி “எனது பணியை நீ பார் என சைகையால் கூறினார்.

குறித்த காட்சி பிரதான வீதியில் சென்ற ஒரு வாகனத்தில் பதிவாகியிருந்தது.

இந்த காணொளியை பலரும் பகிர்ந்து சிரித்து வருகின்றனர்.