யாழப்பாண பகுதியில் பெரும் சோகம்...10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
யாழ். குடாநாட்டில் உள்ள தீவுகளில் ஒன்றான மண்டா தீவு பகுதியில் கடலில் குளிக்க சென்ற 10 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடற்கரைக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே குறித்த சிறுமி நீரில் மூழ்கியுள்ளார்.
இச்சம்பவத்தில் 10 வயதுடைய அவந்திகா -விஜயகாந் என்ற சிறுமியே உயிரிந்தவர் ஆவார்.
குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026