
பரேட் சட்டத்தை இடைநிறுத்த அமைச்சரவை அனுமதி!
பரேட் சட்டத்தை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, பரேட் சட்டத்தை அமல்படுத்துவது 2024 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.