ராஜகிரியவில் சிசு ஒன்றின் சடலம் மீட்பு

ராஜகிரியவில் சிசு ஒன்றின் சடலம் மீட்பு

ராஜகிரிய மதின்னாகொட பாலத்திற்கு அருகில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (31) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இருந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.