
தமிழர் பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் படுகாயம்...
திருகோணமலை, குச்சவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றையதினம் (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், இது தொடர்பில் குச்சவெளி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.