திடீரென ஏற்பட்ட பாரிய விபத்து- சி.சி.ரீவியில் பதிவான காட்சிகள்!

திடீரென ஏற்பட்ட பாரிய விபத்து- சி.சி.ரீவியில் பதிவான காட்சிகள்!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரொசல்ல சந்திக்கருகில் கெப் வண்டியொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது சாரதி தெய்வதீனமாக உயிர்தப்பியதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் நரிலுள்ள வங்கியில் ஏ.டி எம்.இயந்திரத்தில் பணம் வைப்பிலிட்டு விட்டு கண்டி நோக்கி சென்ற கப் வண்டி, முன்னால் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பிற்பகல் 3.30மணியளவிலேயே பள்ளத்தில் பாய்ந்து மவுண்ஜின் வீதியில் வீழ்ந்து விபத்துக்குளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர் .

விபத்து சம்பவம் சி.சி டி.வியில் பதிவாகியுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.