மட்டக்களப்பில் பதிவான கொரோனா மரணம்...!

மட்டக்களப்பில் பதிவான கொரோனா மரணம்...!

மட்டக்களப்பு - அரசடி கிராமசேவகர் பிரிவில் உயிரிழந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மாரடைப்பின் காரணமாக குறித்த நபர் உயிரிழந்த நிலையில், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்றுதியானதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  தெரிவித்தார்.

79 வயதுடைய ஆண் ஒருவரே   உயிரிழந்துள்ளர்


இதனையடுத்து குறித்த நபரின் சடலத்தை அங்கிருந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், அந்தப் பகுதியில் கிருமித்தொற்று நீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், குறித்த பகுதியிலுள்ள வீதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.