கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கிய அனைவரும் பூரண குணமடைந்தனர் – எயார் இந்தியா!

கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கிய அனைவரும் பூரண குணமடைந்தனர் – எயார் இந்தியா!

கேரள மாநிலம் கோழக்கோடு விமான விபத்தில் காயமடைந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டுபாயில் இருந்து இந்தியா வருகை தந்த ஏயார் இந்தியா விமானம் கடந்த வெள்ளிக்கிழமை தரையிரங்கும்போது விபத்தில் சிக்கியது.

குறித்த விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 85 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் எஞ்சியிருந்த 7 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) குணமடைந்து வீடு திருப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விமான விபத்திற்கு விமானிகளின் தவறான முடிவும் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக கேப்டன் எஸ்.எஸ் சாஹர் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த விபத்து தொடர்பிலான காரணத்தை ஆராய்ந்து அடுத்த 5 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் தரையிரங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.