இன்றும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்புகள்

இன்றும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்புகள்

வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.

வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று (01) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது.

எனினும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை, அனர்த்திவிட்டு குறித்த நபர் வெளியில் சென்ற ஒரு நொடியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்படி நபர் தெரிவித்தள்ளார்.

வெடிப்பை அடுத்து எரிவாயு அடுப்பு முழுமையாக சேதமமைந்துள்ளதுடன், அதன்பின்னர் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தாக வீட்டீன் உரிமையாளர் வேலுசாமி ஸ்ரீநாத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.