லிந்துலை நகரசபையின் நகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது

லிந்துலை நகரசபையின் நகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது

தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் நகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தேர்தல் மேலும் ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற பிரதி ஆணையாளர் நிரோஷன் இதனை தெரிவித்துள்ளார்.

நகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில், கூட்டத்தை நடத்துவதற்கு போதியளவான உறுப்பினர்கள் இல்லாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலை - லிந்துலை நகரசபையில் 12 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே இன்றைய தினம் அவையில் பிரசன்னமாகியிருந்தாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளரும், குறித்த நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட இருந்த நிலையிலேயே இந்த தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.