ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான் புரட்சிப்படை வெளியிட்ட அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான் புரட்சிப்படை வெளியிட்ட அறிவிப்பு

 அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் தலையீடுகளும் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இன்று வியாழக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

"அமெரிக்க அதிகாரிகளின் மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும், பிராந்தியத்தில் கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது," என்று IRGC வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பலில் பற்றிய தீ

தொடர்ச்சியான "அச்சுறுத்தல்களும் தலையீடுகளும்" நிலைமையை "மேலும் கடினமாகவும் சிக்கலாகவும்" மாற்றும் என்று அது எச்சரித்தது.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான் புரட்சிப்படை வெளியிட்ட அறிவிப்பு | Strait Of Hormuz Cannot Reopen While Us Threats

 "அமெரிக்க விமானங்களின் தூண்டுதலின் பேரில்," இரண்டு எண்ணெய் கப்பல்கள், ஹோர்முஸ் eீரிணைக்கு தெற்கே "பாதுகாப்பற்ற பாதை" வழியாக இரவோடு இரவாகச் செல்ல முயன்றதாக IRGC கூறியது. அவற்றில் ஒரு கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு கப்பல்களும் உடனடியாகத் திரும்பிச் சென்றதாக புரட்சிகர படை தெரிவித்தது.

ஹோர்முஸ் நீரிணையில் வெளிச்சக்திக்கு இடமே இல்லை

"ஹோர்முஸ் நீரிணை எங்கள் பிரதேசம், அதை ஐ.ஆர்.ஜி.சி கடற்படை உறுதியாகக் கட்டுப்படுத்துகிறது," என்று அந்த அறிக்கை கூறியதுடன், "ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து வரும்" எந்தவொரு வெளி சக்தியும் அதற்குள் தலையிட அனுமதிக்கப்படாது என்றும் அது மேலும் குறிப்பிட்டது.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான் புரட்சிப்படை வெளியிட்ட அறிவிப்பு | Strait Of Hormuz Cannot Reopen While Us Threats

முன்னதாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக, ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் ஒரு "கடுமையான தாக்குதல் அலையை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்திருந்தது.