ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கெடுபிடி...! திருப்பி அனுப்பப்பட்ட கப்பல்கள்
ஹோர்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) தெற்குப் பகுதியில் சட்டவிரோதமான மற்றும் பாதுகாப்பற்ற பாதையைப் பயன்படுத்த முயன்ற கப்பல்களைத் தான் திருப்பி அனுப்பியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானிய அரசு ஊடகமான IRIB இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தின் தூண்டுதலால் ஆறு கப்பல்கள் ஈரானின் நாவிகேஷன் மற்றும் இருப்பிடத்தைக் காட்டும் அமைப்புகளை (Navigation and Positioning Systems) முடக்கி விதிகளை மீறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரசீக வளைகுடா
இந்தநிலையில் குறித்த கப்பல்களில் ஒரு கப்பல் தொடர்பில் மாத்திரம் தகவல் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், ஏனைய கப்பல்கள் ஈரானியப் படைகளால் மீண்டும் பாரசீக வளைகுடாவை (Persian Gulf) நோக்கித் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான மோதல்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதியில் ஈரான் தொடர்ந்து கப்பல்களை இலக்கு வைத்து நடவடிக்கை எடுத்து வருவதை இது சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.