மாட்டிற்கு புல் வெட்டச் சென்ற குடும்பஸ்தர் வயலில் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு , வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தையா நந்தகுமார் (வயது 58) வயல் நிலத்தில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது மாட்டிற்குப் புல் வெட்டுவதற்காக வீட்டிலிருந்து சென்றவர், இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, இரவு 7 மணியளவில் வயல் காணிக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டறிந்தனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகத்திற்கிடமான காரணங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.