சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01-07-2026) பவுணுக்கு 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று (30-06-2026) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டதன் அடிப்படையில்  இன்று அதன் விலை 379,000 ரூபாயாக குறைந்துள்ளது.

இதனடிப்படையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

 

தங்கத்தின் விலை

அத்தோடு 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 348,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 

சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Good News For Gold Buyers Price Reduced Today

இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,375 ரூபாயாகவும் மற்றும்  22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,588 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் நிலையில் அதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் தொடர்ந்து பிரதிபலித்து வருவதால் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.