சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : கல்வி அமைச்சின் அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : கல்வி அமைச்சின் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு உத்தியோககபூர்வமாக அறிவித்துள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் வெளியீட்டிற்கு முன்னதாக ஆவணங்களை இறுதி செய்து வருவதாகவும் கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன உறுதிப்படுத்தினார்.

2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட நிலையில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 451,463 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

 

ஆடி அமாவாசை தினத்தை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்குமாறு கோரிக்கை

ஆடி அமாவாசை தினத்தை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்குமாறு கோரிக்கை

 

உயர்தர பரீட்சை

இதேவேளை அடுத்து நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர (A/L) பரீட்சையை ஒத்திவைக்க சில குழுக்கள் கோரிய போதிலும், அது திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் உறுதியாகக் கூறினார்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : கல்வி அமைச்சின் அறிவிப்பு | 2025 Ol Exam Results Will Be Release By June 15

அத்துடன் பல்வேறு தரப்பினர் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரியிருந்த போதிலும், திட்டமிடப்பட்ட கால அட்டவணையை மாற்ற வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.