ப்ளிப்கார்ட் சேல்: 50 எம்.பி கேமிரா, 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்... மோட்டோ 5ஜி போன் ரூ.17,999 மட்டுமே
குறைந்த விலையில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய 5ஜி போனை வாங்க நினைப்பவர்களுக்கு பிளிப்கார்ட்டின் மே 9 விற்பனையில் கிடைக்கும் மோட்டோரோலா ஜி96 5ஜி (Motorola G96 5G) ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாகும்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், மே 9-ம் தேதி முதல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'Sasa Lele Sale' எனும் சிறப்பு விற்பனையைத் தொடங்க உள்ளது. இந்த விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோட்டோரோலா நிறுவனத்தின் 5ஜி போன் ஒன்று மிகக் குறைந்த விலையில் கிடைக்க உள்ளது.
தற்போது சந்தையில் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படும் மோட்டோரோலா ஜி96 5ஜி (Motorola G96 5G) ஸ்மார்ட்போன், இந்தச் சிறப்பு விற்பனையின் போது ரூ.17,999 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தள்ளுபடிகளும் வழங்கப்பட உள்ளன.
6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதி, ஐ.பி-68 தரத்திலான வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், கேமிங் அனுபவத்திற்காக அட்ரினோ 710 ஜிபியு, சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வசதி, பின்புறம் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் கேமரா அமைப்பு, முன்புறம் செல்பிகளுக்காக 32 எம்பி உயர்தர கேமரா, 5500mAh பிரம்மாண்ட பேட்டரி வசதி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டால்பி அட்மோஸ் ஆதரவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள். வாடிக்கையாளர்கள் இந்த போனை பான்டோன் கிரீனர் Pastures, ஆஷ்லீ ப்ளூ, கேட்லியா ஆர்க்கிட் மற்றும் டிரெஸ்டன் ப்ளூ ஆகிய நான்கு தனித்துவமான நிறங்களில் தேர்ந்தெடுக்க முடியும். குறைந்த விலையில் பிரீமியம் அம்சங்கள் உடன் கூடிய 5ஜி போனை வாங்க நினைப்பவர்களுக்கு பிளிப்கார்ட்டின் இந்த மே 9 விற்பனை ஒரு சிறந்த வாய்ப்பாகும்.