இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வெற்றியுடன் தாயகம் திரும்பியது

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வெற்றியுடன் தாயகம் திரும்பியது

 டி.கே.பி. கபில 

பங்களாதேஷில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 (T20) கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று, இரண்டிலும் முழுமையான வெற்றியைப் (White-wash) பதிவு செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, கட்டுநாயக்க விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை (03) அன்று பிற்பகல் வந்தடைந்தது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இலங்கை அணி அபார சாதனை படைத்துள்ளது.

பங்களாதேஷின் டாக்கா நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் "யு.எல்.- 190" (UL-190) ரக விமானம் மூலம் இன்று மாலை 04:12 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.

வெற்றி வாகை சூடித் திரும்பிய வீராங்கனைகளை வரவேற்பதற்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வருகை தந்திருந்தனர்.