பங்களாதேஷுக்கெதிரான தொடரைச் சமப்படுத்திய நியூசிலாந்து

பங்களாதேஷுக்கெதிரான தொடரைச் சமப்படுத்திய நியூசிலாந்து

பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து சமப்படுத்தியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை பங்களாதேஷ் வென்றதோடு, இரண்டாவது போட்டி கைவிடப்பட்ட நிலையில், மிர்ப்பூரில் சனிக்கிழமை (02) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றதன் மூலமே தொடரை 1-1 என நியூசிலாந்து சமப்படுத்தியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

பங்களாதேஷ்: 102/10 (14.2/15 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெளஹிட் ஹிரிடோய் 33 (24), லிட்டன் தாஸ் 26 (17), சைஃப் ஹஸன் 16 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் கிளார்க்சன் 3/9 [2], பென் சியர்ஸ் 2/12 [2.2], நாதன் ஸ்மித் 2/14 [2], இஷ் சோதி 1/22 [3])

நியூசிலாந்து: 104/4 (11.4/15 ஓவ. ) (துடுப்பாட்டம்: பெவன் ஜேக்கப்ஸ் ஆ.இ 62 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொரிஃபுல் இஸ்லாம் 3/19 [3], மஹெடி ஹஸன் 1/20 [3], மொஹமட் சைஃபுடீன் 0/7 [1])

போட்டியின் நாயகன்: பெவன் ஜேக்கப்ஸ்

தொடரின் நாயகன்: தெளஹிட் ஹிரிடோய்