பங்களாதேஷை வௌ்ளையடிப்பு செய்தது இலங்கை!

பங்களாதேஷை வௌ்ளையடிப்பு செய்தது இலங்கை!

பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை மகளிர் அணி முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.


இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் இலங்கை அணி 03 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


பங்களாதேஷின் சில்ஹெட் (Sylhet) நகரில் நடைபெறவிருந்த இப்போட்டிக்கு மழை குறுக்கிட்டதால், போட்டி 09 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.


முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 09 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றது.


88 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியால் 09 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.


இதற்கு முன்னர் நடைபெற்ற முதலாவது போட்டியில் 25 ஓட்டங்களாலும், இரண்டாவது போட்டியில் 21 ஓட்டங்களாலும் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.