தமிழக வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. உங்கள் தொகுதியில் பதிவான ஓட்டு எவ்வளவு தெரியுமா? டேட்டா
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் 85.14 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி உள்ளது. இது புதிய சாதனையாகும். அதுமட்டுமின்றி சென்னையில் எப்போதும் குறைந்து காணப்படும் வாக்குப்பதிவு இந்த முறை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.62 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு ஓட்டுகள் பதிவாகி உள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று அமைதியாக முடிவடைந்தது. மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்றைய தேர்தலில் மாநிலம் முழுவதும் மொத்தம் 85.14 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சட்டசபை தொகுதிகளில் எவ்வளவு சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது? என்பது பற்றிய விவரம் வருமாறு:
அரியலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்டத்தில்87.41 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. இங்குள்ள அரியலூர் தொகுதியில் 88.97 சதவீதமும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 85.85 சதவீத வாக்கும் பதிவாகி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 85.42 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இங்குள்ள செங்கல்பட்டு தொகுதியி்ல 86.42 சதவீதம், செய்யூரில் 91.02 சதவீதம், மதுராந்தகத்தில் 92.28 சதவீதம், பல்லாவரத்தில் 83.63 சதவீதம், சோழிங்கநல்லூரில் 80.46 சதவீதம், தாம்பரத்தில் 83.94 சதவீதம், திருப்போரூரில் 88.71 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
சென்னை மாவட்டம்
சென்னை மாவட்டத்தில் 83.73 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. தொகுதி வாரியாக பார்த்தால் ஆர்கே நகர் - 90.50 சதவீதம்
பெரம்பூர் - 89.79 சதவீதம், கொளத்தூர் - 86.11 சதவீதம், வில்லிவாக்கம் - 86 சதவீதம், திருவிக நகர் - 78.70 சதவீதம்
எழும்பூர் - 85.55 சதவீதம், ராயபுரம் - 79.34 சதவீதம், துறைமுகம் - 82.75 சதவீதம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - 84.34 சதவீதம்
ஆயிரம் விளக்கு - 83.09 சதவீதம், அண்ணா நகர் - 85.64 சதவீதம், விருகம்பாக்கம் - 85.49 சதவீதம், சைதாப்பேட்டை - 77.84 சதவீதம், தியாகராயநகர் - 83.55 சதவீதம், மயிலாப்பூர் - 74.88 சதவீதம் வேளச்சேரி - 84.50 சதவீதம் வாக்கும் பதிவாகி உள்ளது.
கோவை மாவட்டம்
கோவை மாவட்டத்தில் மொத்தம் 84.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கோவை வடக்கில் 75.67 சதவீதம், கோவை தெற்கில் 82.16 சதவீதம், கவுண்டம்பாளையத்தில் 85.50 சதவீதம், கிணத்துக்கடவில் 87.11 சதவீதம், மேட்டுப்பாளையத்தில் 85.96 சதவீதம், பொள்ளாச்சியில் 88.09 சதவீதம், சிங்காநல்லூரில் 81.20 சதவீதம், சூலூரில் 88.31 சதவீதம், தொண்டாமுத்தூரில் 87.50 சதவீதம், வால்பாறையில் 85.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 85.49 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. புவனகிரி தொகுதியில் 87.90 சதவீதம், சிதம்பரம் தொகுதியில் 83.81 சதவீதம், கடலூரில் 83.88 சதவீதம், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் 82.11 சதவீதம், குறிஞ்சிப்பாடியில் 88.93 சதவீதம், நெய்வேலியில் 87.19 சதவீதம், பண்ருட்டியில் 86.09 சதவீதம், திட்டக்குடியில் 83.33 சதவீதம், விருத்தாச்சலத்தில் 86.05 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டம்
தர்மபுரி மாவட்டத்தில்90.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. தர்மபுரி தொகுதியில் 89.44 சதவீதம், அரூர் தொகுதியில் 87.66 சதவீதம், பலக்கோடு தொகுதியில் 92.57 சதவீதம், பாப்பிரெட்டி பட்டி தொகுதியி்ல 90.36 சதவீதம், பென்னாகரத்தில் 90.71 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 89.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆத்தூர் தொகுதியில் 89.19 சதவீதம், திண்டுக்கல்லில் 86.34 சதவீதம், நத்தத்தில் 91.13 சதவீதம், நிலக்கோட்டையில் 88.57 சதவீதம், ஒட்டன்சத்திரத்தில் 90.73 சதவீதம், பழனியில் 86.24 சதவீதம், வேடச்சந்தூரில் 92.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டத்தில் 90.10 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அந்தியூர் தொகுதியில் 88.15 சதவீதம், பவானியில் 91.96 சதவீதம், பவானிசாகரில் 89.52 சதவீதம், ஈரோடு கிழக்கில் 89.80 சதவீதம், ஈரோடு மேற்கில் 87.95 சதவீதம், கோபிசெட்டிபாளையத்தில் 90.74 சதவீதம், மொடக்குறிச்சி 90.34 சதவீதம், பெருந்துறையில் 92.47 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 88.32 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சியில் 87.93 சதவீதம், ரிஷிவந்தியத்தில் 88.91 சதவீதம், சங்கராபுரத்தில் 87.48 சதவீதம், உளுந்தூர்பேட்டையில் 89.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 87.39 சதவீதம் பதிவானது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் தொகுதியில் 86.15 சதவீதம், காஞ்சிபுரத்தில் 87.15 சதவீதம், ஸ்ரீபெரும்புதூரில் 86.12 சதவீதம், உத்திரமேரூரில் 91.15 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 75.61 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. குளச்சல் தொகுதியில் 74.13 சதவீதம், கன்னியாகுமரியில் 81.43 சதவீதம், கிள்ளியூரில் 71.29 சதவீதம், நாகர்கோவில் 74.72 சதவீதம், பத்மநாபபுரம் 75.46 சதவீதம், விளவங்கோடு 75.77 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டத்தில் 92.62 சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகமாக ஓட்டு பதிவான மாவட்டம் கரூர் தான். இந்த மாவட்டத்தில் உள்ளஅரவக்குறிச்சியில் 91.75 சதவீதம், கரூரில் 93.40 சதவீதம், கிருஷ்ணராயபுரத்தில் 92.45 சதவீதம், குளித்தலையில் 92.79 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. பர்கூரில் 88.01 சதவீதம், ஓசூரில் 80.35 சதவீதம், கிருஷ்ணகிரியில் 84.85 சதவீதம், தளி தொகுதியில் 85.89 சதவீதம், ஊத்தங்கரையில் 86.15 சதவீதம், வேப்பனஹள்ளியில் 89.84 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 80.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மதுரை மத்திய தொகுதியில் 73.88 சதவீதம், மதுரை கிழக்கு 79.90 சதவீதம், மதுரை வடக்கு 72.63 சதவீதம், மதுரை தெற்கு 78.19 சதவீதம், மதுரை மேற்கு 77.77 சதவீதம், மேலூர் 82.22 சதவீதம், சோழவந்தான் 87.23 சதவீதம், திருமங்கலம் 87.03 சதவீதம், திருப்பரங்குன்றம் 81.41 சதவீதம், உசிலம்பட்டி 82.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீதம் வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் 79.67 சதவீதம், பூம்புகார் தொகுதியில் 84.09 சதவீதம், சீர்காழி தொகுதியில் 82.44 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 86.30 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இங்கள்ள கீழ்வேளூர் தொகுதியில் 87.98 சதவீதம் நாகப்பட்டினத்தில் 85.87 சதவீதம், வேதாரண்யத்தில் 85.18 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 90.21 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இங்குள்ள குமாரபாளையம் தொகுதியில் 92.65 சதவீதம், நாமக்கல் 87.72 சதவீதம், பரமத்தி வேலூர் 90.24 சதவீதம், ராசிபுரம் 90.60 சதவீதம், சேந்தமங்கலம் 90.17 சதவீதம், திருச்செங்கோடு 90.06 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 85.50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இங்குள்ள குன்னம் தொகுதியில் 85.04 சதவீதம், பெரம்பலூரில் 85.92 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 83.90 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. ஆலங்குடி தொகுதியில் 84.59 சதவீதம், அறந்தாங்கியில் 78.97 சதவீதம், கந்தர்வகோட்டை 84. 94 சதவீதம், புதுக்கோட்டையில் 83.26 சதவீதம், திருமயத்தில் 82.07 சதவீதம், விராலிமலையில் 89.80 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 89.89 சதவீதம் வாக்கு பதிவு செய்யப்பட்டள்ளது. அரக்கோணம் தொகுதயில் 90.12 சதவீதம், ஆற்காடு தொகுதியி்ல 91.03 சதவீதம், ராணிப்பேட்டையில் 88.51 சதவீதம், சோளிங்கர் தொகுதியில் 89.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 90.74 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆத்தூர் 90.24 சதவீதம், எடப்பாடி 92.09 சதவீதம் கெங்கவல்லி 88.79 சதவீதம், மேட்டூர் 89.22 தவீதம், ஓமலூர் 90.90 சதவீதம், சேலம் வடக்கு 87.40 சதவீதம், சேலம் தெற்கு 91.01 சதவீதம், சேலம் மேற்கு 89.99 சதவீதம், சங்ககிரி 92.52 சதவீதம், வீரபாண்டி 93.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 76.66 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. காரைக்குடியில் 74.33 சதவீதம், மன்னார்குடியில் 79.29 சதவீதம், சிவகங்கையில் 75.99 சதவீதம், திருப்பத்தூரில் 77.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 82.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆலங்குளத்தில் 85.53 சதவீதம், கடையநல்லூர் 81.38 சதவீதம், சங்கரன்கோவில் 81.04 சதவீதம், தென்காசி 82.44 சதவீதம், வாசுதேவநல்லூர் 81.52 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 80.63 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. கும்பகோணம் 81.04 சதவீதம் ஒரத்தநாடு 82.98 சதவீதம், பாபநாசம் 80.34 சதவீதம், பட்டுக்கோட்டை 75.42 சதவீதம், பேராவூரணி 81.89 சதவீதம், தஞ்சாவூர் 77.47 சதவீதம், திருவையாறு 85.19 சதவீதம், திருவிடைமருதூர் 80.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டத்தில் 78.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. குன்னூர் 78.38 சதவீதம், கூடலூர் 80.80 சதவீதம், உதகமண்டலம் 77.59 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
தேனி மாவட்டம்
தேனி மாவட்டத்தில் மொத்தம் 81.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆண்டிப்பட்டியில் 83.68 சதவீதம், போடிநாயக்கனூரில் 82.87 சதவீதம், கம்பம் 81.23 சதவீதம், பெரியகுளம் 78.51 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 83.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அம்பத்தூரில் 77.04 சதவதம், ஆவடியில் 78.81 சதவீதம், கும்மிடிப்பூண்டியில் 90.96 சதவீதம், மாதவரத்தில் 83.47 சதவீதம், மதுரவாயலில் 78.55 சதவீதம், பொன்னேரியில் 89.77 சதவீதம், பூந்தமல்லியில் 83.41 சதவீதம், திருவள்ளூரில் 89.51 சதவீதம், திருவொற்றியூரியில் 84.41 சதவீதம், திருத்தணியில் 90.23 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 83.70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மன்னார்குடியில் 82.14 சதவீதம், நன்னிலத்தில் 85.92 சதவீதம், திருத்துறைப்பூண்டியில் 83.38 சதவீதம், திருவாரூரில் 83.07 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 80.55 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. கோவில்பட்டியில் 79.34 சதவீதம், ஒட்டப்பிடாரம் 79.39 சதவீதம், ஸ்ரீவைகுண்டம் 81.04 சதவீதம், தூத்துக்குடி 80.92 சதவீதம், திருச்செந்தூர் 78.89 சதவீதம், விளாத்திக்குளம் 84.16 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 85.43 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. லால்குடியில் 86.51 சதவீதம், மண்ணச்சநல்லூரில் 87.64 சதவீதம், மணப்பறையில் 88.81 சதவீதம், முசிறியில் 86.82 சதவீதம், ஸ்ரீரங்கத்தில் 87.89 சதவீதம், திருவெறும்பூரில் 81.21 தவீதம், துறையூரில் 86.52 சதவீதம், திருச்சி கிழக்கு 81.77 சதவீதம், திருச்சி மேற்கு 81.35 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 77.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அம்பாசமுத்திரத்தில் 82.89 சதவீதம், நாங்குநேரியில் 80.22 சதவீதம், பாளையம்கோட்டையில் 68.97 சதவீதம், ராதாபுரத்தில் 80.03 சதவீதம், திருநெல்வேலியில் 78.21 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 88.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆம்பூர் 90.67 சதவீதம் ஜோலார்பேட்டை 89.45 சதவீதம், திருப்பத்தூர் 88.69 சதவீதம், வாணியம்பாடியில் 87.01 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 88.59 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அவிநாசியில் 90.57 சதவீதம், தாராபுரத்தில் 88.92 சதவீதம், காங்கேயம் 91.56 சதவீதம், மடத்துக்குளத்தில் 86.90 சதவீதம், பல்லடம் 90.73 சதவீதம், திருப்பூர் வடக்கு 83.14 சதவீதம், திருப்பூர் தெற்கு 90.71 சதவீதம், உடுமலைப்பேட்டை 87.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 89.59 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆரணி 89.31 சதவீதம் செங்கம் 89.46 சதவீதம், செய்யறு 91.97 சதவீதம், கலசப்பாக்கம் 91.03 சதவீதம் கீழ்பென்னாத்தூர் 90.30 சதவீதம், போளூர் 89.37 சதவதம் வந்தவாசி 88.62 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 88.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அணைக்கட்டு தொகுதியில் 89.69 சதவீதம், குடியாத்தம் 90.47 சதவதம், காட்பாடியில் 88.06 சதவீதம், கேவி குப்பம் 87.25 சதவீதம், வேலூர் 87.98 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 89.00 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. சிங்கை தொகுதியில் 88.51 சதவீதம், மயிலம் 89.65 சதவதம், திண்டிவனம் 88.56 சதவீதம் திருக்கோவிலூர் 88.46 சதவீதம், வானூர் 91.08 சதவீதம், விக்கிரவாண்டி 90.51 சதவீதம், விழுப்புரம் 86.60 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 84.90 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தொகுதியில் 84.91 சதவீதம், ராஜபாளையத்தில் 84.35 சதவீதம், சாத்தூரில் 85.63 சதவீதம், சிவகாசி தொகுதியில் 84.07 சதவீதம், திருச்சுழியில் 87.23 சதவீதம், விருதுநகரரில் 82.74 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இப்படியாக மாநிலத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.