அமெரிக்கா முழுமையான வெற்றி.! ட்ரம்ப வெளியிட்டுள்ள அறிவிப்பு

அமெரிக்கா முழுமையான வெற்றி.! ட்ரம்ப வெளியிட்டுள்ள அறிவிப்பு

அடுத்த இரண்டு வாரங்களில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முழுமையான வெற்றியை அறிவிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள முதன்மைத் தேர்தலில் போட்டியிடும் தெற்கு கரோலினா செனட்டர் லிண்ட்சே கிரஹாமிற்காக நடத்தப்பட்ட ஒரு தொலைபேசி வழிப் பேரணியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஈரான் தரப்பு ஒரு மிகச் சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

 

எண்ணெய் விலைகள் 

மேலும், அவர்கள் தங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்றும், அணு ஆயுதங்கள் எதையும் வைத்திருக்க மாட்டோம் என்பதற்கு உடன்படத் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்று வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அடுத்த இரண்டு வாரங்களில் முழுமையான வெற்றியை அறிவிக்கும்போது அது உறுதியாகும் என்றும், அது மிக விரைவில் நடக்கும்போது உலக சந்தையில் எண்ணெய் விலைகள் அதலபாதாளத்தில் வீழும் என்றும் தெரிவித்துள்ளார்.