
அறுவை சிகிச்சை நடுவில் மருத்துவர் செய்த மோசமான செயல்!
இங்கிலாந்தில் மயக்க மருந்து செலுத்தப்பட்ட நோயாளியை அறுவை சிகிச்சையின் இடைநடுவே விட்டுவிட்டு செவிலியருடன் பாலியல் உறவில் பாகிஸ்தான மருத்துவர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இதனையடுத்து மருத்துவர் இங்கிலாந்தில் இருந்து அவரது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
எனினும் மீண்டும் இங்கிலாந்தில் பணிபுரிய அனுமதி கோரிய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மருத்துவ பயிற்சியாளர்கள் தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 8 நிமிடங்கள் அறுவை சிகிச்சையை இடைநிறுத்தியதாகவும், எனினும் நோயாளிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அந்த மருத்துவர் குறிப்பிட்டார்.
இதேவேளைக் குறித்த செயலில் ஈடுபட்டமை தவறானது எனவும் அதற்காகத் தான் வெட்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தில் மருத்துவர் கூறினார்.
மன அழுத்தமே இந்த செயலில் ஈடுபட வழிவகுத்ததாக அவர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பிலான வழக்கு தொடரப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் மற்றும் செவிலியர் இடையே பாலியல் உறவு கொள்வது என்பது மருத்துவ அறநெறிகளுக்கு எதிரானது, சட்டவிரோதமானது மற்றும் கடுமையான மருத்துவ மற்றும் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு குற்றச் செயலாகும் என அந்த சம்பவம் விமர்சிக்கப்பட்டு வருகிறது.